Sunday, April 19, 2009

பெரியவங்களுக்கு :

அய்யா தமிழர்களே,

அப்பா கலைஞர் அவர்களே,
அம்மா செயலலிதா அவர்களே,
அன்னை சோனியா அவர்களே,
தந்தை மன்மோகன் சிங் அவர்களே,
சின்ன அண்ணன் திருமா அவர்களே,
நடுல அண்ணன் வைகோ அவர்களே,
பெரிய அண்ணன் ராமதாசு அவர்களே,

நாம எல்லோரும் ஒரே நாடு ஒரே சொந்தம், ஒரே குடும்பம் .
நம்ம நெருங்கிய உறவுக்காரன் செத்து சுண்ணாம்பு சுண்ணாம்பு ஆகிட்டிருக்கான். நீங்க அதுலவெற்றிலையை தடவிக்கிட்டு எல்லாரும் கிளம்பிட்டிங்களா வேட்டைக்கு!

கிளம்புங்க !
கிளம்புங்க!

சாவு எல்லோர் வீட்டிலையும் , எல்லா நாட்டிலையும் நடக்குறதுதான்.
சாவ பாத்துட்டு போன சகுனம் நல்லாருக்கும்னு சொல்லுவாங்க. அதனால
வேட்டைக்கு கிளம்புங்க,வெற்றி நமதே!

உங்கள மாதிரித்தான், எவன் வீட்ல எழவு விழுந்தாலும் என் வீடல்அட்டுப்பு எரியுதான்னு பாப்பேன். என் பசி எனக்கு! நான் பட்டினி கிடந்தா செத்தவன் என்ன எந்திரிக்கவா போறான்,

ஆனா நீங்க உண்ணவிரதம் எல்லாம் இருக்குறீங்க! உள்ளுக்குள்ள வேதனைபடுறீங்க , எல்லா மேடையிலும் பேசுறீங்க. நீங்க ரெம்ப நல்லவங்கதான். ஆனாஉங்கள எல்லாரும் திட்டுறாங்க , மனசுக்கு சங்கடமா இருக்கு

நம்ம டி ஆர் சொல்லுவாரு , தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார்அறிவார் ன்னு .
நீங்க இங்க உண்ணாவிரதம் ,ஆர்ப்பாட்டம் ,மனிதசங்கிலி எல்லாம் பண்ணுறீங்க.
ஆனா ஏன், இது வரையிலும் ஒன்னும் நடக்கல. ஏன்! ஏன்! ஏன்

மனிதசங்கிலி : தாம்பரம் வரை பத்தாது.அது டெல்லி வரைக்கும் அல்லவா நீளனும். அப்பதானே அன்னைக்கு தகவல் கிடைக்கும்.


உண்ணாவிரதம்:
உங்க வீட்டில் நீங்க சாப்பிடாம இருந்தா, அம்மா என்ன நினைப்பாங்க, பிள்ளைக்கு இப்ப பசி இல்ல போல, அப்புறும் பசிச்சா சாப்பிட்டுகிடுவான்-ன்னு .
அது போலவே நீங்களும் பசி தாங்காம , நீங்களாவே சாப்பிடுகிறீங்க.
அப்புறம் அன்னைக்கு என்ன தோணும். பசிச்சா சாப்பிட்டுகிடுவான்-ன்னு .
ஆனா ஆச்சி வீட்ல (டெல்லி ல) போயி ஒரு நாள் சாப்பிடாமா இருந்து பாருங்க, எல்லாரும் அலறுவாங்க. கொஞ்சம் ட்ரை பண்ணுங்க ப்ளீஸ்.

ஆர்ப்பாட்டம்:
குடிகாரன்தான் எங்கயோ உள்ள பிரச்சினைக்கு அவன் வீட்லை வந்து சண்டைபோடுவான். தங்கள் நாட்டுல யாரை எதுத்து ஆர்ப்பாட்டம் பன்னுரீனாக் .
நீங்க டெல்லி போங்க ,ஆர்ப்பாட்டம் பண்ணுங்க
இலங்கை போங்க ஆர்ப்பாட்டம் பண்ணுங்க , அப்பதானே அவங்களுக்கு நம்மமனசு புரியம்

பெரியவங்களுக்கு :

நம்ம எதிராளி நம்ம புள்ளைய எல்லாத்தயும் கொல்ல போறான். நீங்க அவனுக்குகத்திய தீட்டி ,பயிற்சியும் கொடுக்குறதா கேள்விப்பட்டேன்

ஏன்னு கேட்டாக்க

நாம கத்திய கொடுக்காட்டாலும், ப்க்கத்து வீட்டு காரன் அவனுக்கு கம்புகொடுக்கபோறான். அத வச்சு நம்ம புள்ளைய அடிக்கும் முன்ன , நாமே கத்தியகொடுத்தா , குத்திட்டு நாமகூடவே இருப்பான்னுசொன்னீகளாம்!

நீங்க ஒரு அதட்டு அதட்டுன அடங்கிபோரவன பாத்து
ஒரு நாட்டைப் போர் புரியாதே என நம்மால் எப்படிச் சொல்லமுடியும் நுசொன்னீகளாம்!


அடுத்தவன் வீட்ல நடந்த அது செய்தி, நம்ம வீட்ல நடந்தஅது அசம்பாவிதம்


காந்தி உண்ணவிரதம் இருந்தா, எதிராளி கலங்குனான்ல் , ஆனா அது என்உங்களுக்கு நடக்கல, பங்காளி பாத்துகிட்டு தான இருந்தான்

எலக்சன் முடிஞ்சி பாக்கலாம் நு நினைக்காதீங்க , அப்புறம் பாக்க ஒண்ணும்இருக்காது .

நீங்க பெரியவங்க உங்களால முடியும், கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க ப்ளீஸ்.