Sunday, October 26, 2008

ஒரு கேள்வி பல கோணம்:

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பி.இளவரசன், திருப்பூர்.

இன்றையக் காதலர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்?

இவர்கள் மாதாந்திர ‘ஆல்ரூட்’ பாஸ் வைத்திருக்கிறார்கள். இதைக் கொண்டு எந்தத் தடத்திலும் இவர்கள் பயணிக்கலாம் என்பதால், தடம் தெரியாமல்தான் இவர்களின் பயணமே தொடர்கிறது.

அந்துமணி பதில்கள்

ஆர்.ரங்கன், கோவை: சென்னை கடற்கரையில் ரவுடிகள் தொந்தரவு அதிகம் என்கின்றனரே...


* படகு மறைவில் ஒதுங்கி சில்மிஷத்தில் ஈடுபடுவோருக்கும், கும்மிருட்டில் சல்லாபம் செய்வோருக்கும் ரவுடிகளால் சிக்கல் தான்! ஆனால், இவ்வளவு மக்கள் தொகை உள்ள சென்னை மாநகரில், நடுத்தர வருமானமுள்ள அல்லது தகப்பன் காசில் வாழும் இளைஞனுக்கு கடற்கரையைத் தவிர வேறு இடமில்லையே!



படித்ததில் பிடித்தது...

குமுதம்: 2008-10-29

ஏர் உழவன் சின்னத்தை சுப்ரமணிய சாமி இழந்து விட்டாரே?

பி.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

சே, என்ன அநியாயம், அது மட்டும் கிடைத்திருந்தால் அவர் கட்சி அடுத்த தேர்தலில் இருநூறு இடங்களில் ஜெயித்திருக்குமே..


ஒரு வழியாக அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே?

ஆர். செல்வம், கரூர்.

பார்த்துக் கொண்டே இருங்கள், இன்னும் கொஞ்ச நாளிலேயே தேனும் பாலும் ஓடப் போகிறது. பிடித்து வைக்கப் பாத்திரம் இல்லாமல் திண்டாடப் போகிறோம்.

கல்கண்டு:

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆட்டம் காண்கிறதா?

தெரியாது. ஆனால் ஒரு வதந்திக்கு எவ்வளவு வலிமை உண்டு என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்நேரம் உணர்ந்திருக்கும்.